அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு யாரும் குரல் கொடுக்காத நிலையில் கல்முனை மாணவ மீட்பு பேரவையின் மூலம் பல உதவிகளைச் செய்து வந்ததுடன் மாணவ மீட்புப் பேரவையின் தலைவர்
என்பதனால் அப்பகுதில் நடைபெற்ற நிகழ்வுகள் யாவற்றுக்கும் அழைப்புக்கிடைப்பதனால் நான் செல்வது வழமை அதனை வைத்து சிலர் தனது அரசியல் நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக பிழையான செய்திகளை சில இணையத்தளத்திற்கு வழங்குவது எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடாகும்
இவ்வாறான செய்திகளை வெளியிடுவதை சில இணையத்தளங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என கல்முனை மாணவ மீட்புப் பேரவையின் தலைவர் கலாநிதி பொறியியலாளர் எஸ்;.கணேஸ் தெரிவித்தார்
சில இணையத்தளங்கள் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டு அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளமையினை கண்டித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்...
நான் சிறியவயதில் இருந்தே சமூகத்தின் நலன்சார்ந்த சேவைகளைச் செய்து வருவதுடன் தமிழ்த்தேசியத்திற்காக பங்காற்றிவருகின்றேன் அத்தோடு மாணவ மீட்பு பேரவையின் தலைவராக இருந்து கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற்றிவருகின்றேன்
தமிழ்த் தேசியத்திற்கும் துரோகம் இழைக்கும் எந்தச் செயலையும் செய்யமாட்டேன் தமிழ் மக்களின் உரிமைக்காகவே எப்போதும் குரல் கொடுத்து வந்தவன் இதனை அறியாதவர்கள் பொருத்தமற்ற செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முனைவது பொருத்தமற்றது
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருவதனால் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் எனக்கு அழைப்பு கிடைப்பது வழமை அதற்குச் செல்லும் போது ஏனைய அதிதிகளும் வந்திருப்பார்கள் அந்த அதிதிகளின் புகைப்படத்துடன் நானும் இருப்பது வழமை அதற்காக நான் அவர்களுடன் தொடர்பு வைத்தவன் என்பது எந்த வகையில் நியாயம்
எனக்கு என்னுடைய சேவையினைப் பாராட்டி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் பல விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன அந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் இருக்கும் அமைச்சர்கள் அதிதிகளாக வருகை தந்திருப்பார்கள், அப்போது பட்டம் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டோருடன் அதிதிகளும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்திருந்தோம் ஆனால் அப்படங்கள் திட்டமிட்டு ஏனையவர்களின் படங்களை நீக்கிவட்டு என்னுடைய படத்துடன் இலங்கையில் இருக்கும் அமைச்சர்களினுடைய படத்தையும் இணைத்து இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளமை வேதனையான விடயமாகும் என்றார்

No comments:
Post a Comment