#M17 ஹெலிகொப்டர்கள் 17 இனைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முன்னெடுக்கப்படும் – நிதி அமைச்சர்
# கடனட்டைகளுக்கான வட்டி 8% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபா 5000 ஆக குறைப்பு – நிதி அமைச்சர்
# சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீ லங்கா விமான சேவை ஒன்றிணைக்கப்படும் – நிதி அமைச்சர்
# பெப்ரவரி முதல் மஹாபொல புலமைப்பரிசில் ரூபா 5000 ஆக அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
# பாவிக்கப்படாத அரச வாகனங்கள் விற்பனை செய்யப்படும் – நிதி அமைச்சர்
# விளையாட்டு ஔிபரப்பிற்காக மாத்திரம் இயங்கும் தொலைக்காட்சி நிலையத்திற்கு ரூபா 1000 மில்லியன் வரி விதிக்கப்படும் – நிதி அமைச்சர்
# 5000 ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு – நிதி அமைச்சர்
# கசினோ உரிமையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 1000 மில்லியன் ரூபா வரி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர்
# சீமெந்திற்கான விலை ரூபா 90 இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியும் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# 1000 cc திறனுக்கு குறைந்த வாகனங்களிற்கான இறக்குமதி வரி 15% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# அரச வங்கிகளில் ரூபா 2 இலட்சத்திற்கு குறைவான தங்க நகை அடகுக்கான வட்டி முற்றாக நீக்கப்படும் – நிதி அமைச்சர்
# 12.5 கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை ரூபா.1595 – நிதி அமைச்சர்
# மாசி கருவாட்டின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# 1 கிலோ கொத்தமல்லியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# சஸ்டஜன் பால் மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# 400 கிராம் பால்மாவின் ஆகக்கூடிய சில்லறை விலை ரூ.325 – நிதி அமைச்சர்
# சீனியின் விலை 10 ரூபாவினால் இன்றிரவு குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# மண்ணெண்ணெயின் விலை மேலும் 6 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
# கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆகவும் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு 3% ஆகவும் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
# அரச வைத்தியசாலைகளில் வௌி நோயாளர் பிரிவு 24 மணி நேரமும் செயற்படும் – நிதி அமைச்சர்
# பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதி ரூ.5 மில்லியனிலிருந்து ரூ10 மில்லியனாக அதிகரிப்பு – நிதி அமைச்சர்
# பசும்பாலிற்கான வாங்கும் விலை ரூ.10 இனால் அதிகரிப்பு – நிதி அமைச்சர்
# தேயிலை மற்றும் இறப்பருக்கான நிர்ணய விலை அதிகரிப்பு – நிதி அமைச்சர்
# குறைந்த விலைக்கு கை உழவு இயந்திரம் – நிதி அமைச்சர்
# நெல்லிற்கான நிர்ணய விலை ரூ.50 – நிதி அமைச்சர்
# உடன் அமுலுக்கு வரும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.20,000 கொடுப்பனவு – நிதி அமைச்சர்
# ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வங்கி வைப்பு வட்டி வீதம் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
# ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – நிதி அமைச்சர்
# ஓய்வூதியக் கொடுப்பனவு ஏப்ரல் மாதத்திலிருந்து ரூ.1000 இனால் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
# நாட்டின் ஆடைக் கைத்தொழிலை முன்னேற்றுவோம் – நிதி அமைச்சர்
# தனியார் துறையினருக்கும் ஆகக்குறைந்தது ரூ.2,500 இனால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – நிதி அமைச்சர்
# அமைச்சரவை குறைப்பு – ரூ.2.5 பில்லியன் செலவு குறைக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சர்
# முன்னைய அரசாங்கத்தின் கடன்களை செலுத்த வேண்டிய நிலை இந்த அரசிற்கே ஏற்பட்டுள்ளது – நிதி அமைச்சர்
# அரச சேவையாளர்களின் சம்பளம் ரூ.10,000 ஆல் அதிகரிக்கப்படும். இதில் அரைப்பகுதி தற்போதும் மிகுதி ஜூன் மாதமும் வழங்கப்படும். – நிதி அமைச்சர்
# தனியே தெரிவு செய்யப்பட்ட நகரத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – நிதி அமைச்சர்
# 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலக செலவு 9000 கோடியிலும் அதிகம் – நிதி அமைச்சர்
# மொத்தக் கடன் தொகை 8800 பில்லியன் ரூபாய்கள் – நிதி அமைச்சர்
# நாட்டு மக்கள் முற்றாக கடனாளியாகியுள்ளனர் – நிதி அமைச்சர்
# பெற்றோலிய கூட்டுத்தாபன ஹெட்ஜிங் மூலமாக அரசிற்கு 120 அமெரிக்க டொலர்கள் செலவு – நிதி அமைச்சர்
# முன்னைய அரசின் வரவு செலவுத்திட்ட சுருக்கம் – நிதி அமைச்சர்
# 2009 ஆண்டு தேர்தல் முடிவின் பின்னர் எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் நாம் ஹெலிகொப்டரை வழங்கினோம் வீடு செல்வதற்காக – நிதி அமைச்சர்
# இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – நிதி அமைச்சர்
# எமது அரசுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற ஒன்றிணையுங்கள் – நிதி அமைச்சர்
# மைத்திரி நிர்வாகத்தில் புதிய இலங்கை உருவாகுகின்றது – நிதி அமைச்சர்
No comments:
Post a Comment