Latest News

அபுதாபிக்கு பறந்தார் முன்னாள் பொலிஸ் மா அதிபர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரிய அபுதாபி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று அபுதாபி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக செல்லாது சாதாரண வழியில் விமான நிலையத்திற்குள் சென்ற அவர் ரொடான விமான சேவைக்கு சொந்தமான ஆர்.ஜி.402 என்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கையின் தூதுவராக பணியாற்றிய மகிந்த பாலசூரிய, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நாட்டுக்கு அழைக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ராஜபக்ஷ ஆதரவாளரான இவர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபரை் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ஷ அவரை தூதுவராக நியமித்தார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.