முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த பெருந்தெருக்கள் அமைச்சினால் சுமார் 50 பில்லியன் ரூபாய்கள் வீண் விரயம்
செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் பார்க்க, மேலதிகமாக 50 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதில் பெருமளவுத்தொகை பணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தெருக்கள் அமைச்சினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளில் 70 வீதமானவை தேவையற்ற செலவுகள் என்று அமைச்சர் கபீர் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பொய்யான செலவுக்கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மொரட்டுவை பல்கலைக்கழக நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்

No comments:
Post a Comment