Latest News

கூகுள் பிளே மியூசிக்கின் அதிரடிச் சலுகை

பாடல்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளவும், கேட்டு மகிழவும் கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் கூகுள் பிளே மியூசிக் சேவையில் புதிய சலுகை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இச்சேவையில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் இலவசமாக 50,000 பாடல்களை கிளவுட் ஸ்டோரேஜ்ஜில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.
இதற்கு முன்னர் இந்த எல்லை 20,000 ஆகக் காணப்பட்டது.
கூகுள் பிளே மியூசிக்கினால் தரப்படும் இந்த சலுகை அப்பிளின் iTunes சேவையில் தரப்படும் சலுகையை விடவும் இரண்டு மடங்கு ஆகும்.
அதாவது iTunes இல் வருடாந்தம் 24.99 டொலர்களை செலுத்துவதன் மூலம் 25,000 பாடல்களை தரவேற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.