Latest News

விரைவில் அப்பாவாக போகும் டோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி விரைவில் அப்பாவாக போகிறார்.

கடந்த நவம்பர் மாதம் இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடி தோல்வியடைந்தது.
இருப்பினும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கவுள்ள இந்த உலகக்கிண்ண தொடர் அணித்தலைவர் டோனிக்கு மறக்க முடியாததாக அமையவுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி சாக் ஷி, கடந்த 7 முதல் 8 மாதங்களாக வீட்டிலேயே இருக்கிறார். அதனால் உலகக்கிண்ண தொடர் நடக்கும் போது டோனி அப்பா ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் இடைவிடாது போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து தனது மனைவியின் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் டோனி.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.