பொருளாதாரத்தில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் ஜேர்மனி
ஜேர்மனியின் பெருளாதாரம் 2030ம் ஆண்டு இக்கட்டான நிலையை சந்திக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிட்டிஷ் பொருளாதாரமானது உலகவரிசையில் இந்த ஆண்டு 5வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் 1954ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிரிட்டிஷ், ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியை தற்போது முந்தியுள்ளது. இதன் தாக்கமாக அடுத்துவரும் 20 ஆண்டுகளில் ஜேர்மனியின் பொருளாதார நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல் 2018ம் ஆண்டு காமென்வெல்த் போட்டிகள் மூலம் இந்தியாவின் பொருளாதார நிலை உயரும் என்றும், 2025ல் சீனா தனது பொருளாதார தரத்தில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment