Latest News

சூரியனின் 10 கோடியாவது புகைப்படம்! நாசா வெளியிட்டது

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தை சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைகோள் எடுத்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூரியனை சோலார் டைனமிக்ஸ் என்ற கண்காணிப்பு செயற்கைக்கோள் கண்காணித்து வருகிறது.
இது அதிநவீன படத் தொகுப்பு(ஏஐஏ) கருவியின் உதவியுடன் கடந்த 19ம் திகதி சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை எடுத்துள்ளது.
சூரியனின் முழு பகுதியையும் 12 விநாடிகளுக்கு ஒருமுறை 8 கோணங்களில் சுழன்றுகொண்டே புகைப்படம் எடுக்கும் வகையில் 4 தொலைநோக்கிகளை ஏஐஏ பயன்படுத்துகிறது.
இந்த செயற்கைகோள்களில் உள்ள ஏஐஏ மற்றும் 2 இதர கருவிகள் ஆகியவை இணைந்து தினமும் 1.5 டெராபைட் தகவல்களை பூமிக்கு அனுப்புகின்றன.
இதில் சூரியனின் 57,600 புகைப்படங்களும் அடக்கம். இவை சூரியனில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள், வெடிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.