Latest News

உலகக்கிண்ணப் பயிற்சி ஆட்டங்கள்: ஐசிசி அறிவிப்பு

உலகக்கிண்ணப் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் திகதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த மாதம் 14ம் திகதி தொடங்குகிறது.
இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பெப்ரவரி 8ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் அடிலெய்ட், கிறிஸ்ட்சர்ச், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
பெப்ரவரி 8ம் திகதி அடிலெய்டில் நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பெப்ரவரி 10ம் திகதி அடிலெய்டில் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.