Latest News

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தற்போது மாற்றங்கள் இல்லை

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இந்த ஆண்டில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்து. பகுதி ஒன்று பகுதி இரண்டு என வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்களை ஒரே வினாத்தாளில் வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த உத்தேச திட்டம் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தேசிய கல்வி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒன்றரை மணித்தியாலத்திற்கு காலத்தை வரையறை செய்து ஒரு வினாத்தாள் வழங்குதவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. எனினும் பரீட்சை முறைமையில் காணப்படும் சில பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதனைத் தொடர்ந்து இந்த புதிய திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றரை மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பரீட்சை எழுதுவது மாணவர்களுக்கு சிரமமானது எனவும் சிறிய இடைவேளை வழங்கப்பட வேண்டுமெனவும் ஆசிரியர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தப் பரிந்துரை உள்ளிட்ட ஏனைய சில விடயங்கள் குறித்து ஆராய்ந்து திருத்தங்களுடன் அடுத்த ஆண்டில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.