ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதில் 100 நாள் வேலைத்திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைக்கால பட்ஜெட் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும். ஆனால் முன்னைய அரசாங்கம் திறைசேரியை காலியாக்கி விட்டது. இதனால் வருமானத்தை இனித்தான் தேட வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள அதிகரிப்பு வரும் ஜனவரி 30 தொடக்கம் அதிகரிக்கப்படும். மறைமுக வரிகள் நீக்கப்படும். சமுர்த்திப் பயனாளிகளுக்கு 200 ரூபா அதிகரிக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'மகாபொல' புலமைப்பரிசில் அதிகரிக்கப்படும், ஓய்வூதியர்களுக்கு 3500 ரூபா ஓய்வூதிய இடைக்காலக் கொடுப்பனவும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தின 100 நாள் திட்டங்களுக்கு 89 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் என எதிர்க்கட்சிகளில் ஒன்றான 'பவித்திரு ஹெல உறுமய'வின் தலைவர் கம்மன்பில தெரிவித்தார்.

No comments:
Post a Comment