Latest News

ஷங்கர், விக்ரம், சந்தானம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

ஐ திரைப்படத்தில் தங்களை கேவலமாக சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்த இயக்குனர் ஷங்கர்
, அந்த வசனங்களைப் பேசி நடித்த விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருநங்கைகள் போராடி வருகின்றனர்.
திருநங்கைகளில் சிலர் நேற்று (19)சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கைக்குழு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்களைக் கொச்சைப்படுத்தி திரைப்படங்களில் வரும் வசனங்கள், காட்சிகளை அனுமதிக்கக் கூடாது என அவர்கள் அப்போது கோஷமிட்டனர்.
சில திரையரங்குகளின் முன்பும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷங்கரின் வீட்டு முன்பும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதையடுத்து அவரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.