Latest News

நான் சாலைப் பாடகன்.....

பார்வை இருந்தும்
பாதை தெரியவில்லை
பாடகன் இவன் தானே
தினம் சாலையில் பாடுகிறேன்...
ஒரு சான் என் வயிறு
அது நிரம்பிட வழியில்லை
ஊரார் தரும் பணமோ
என் உலை கொதிக்க போதவில்லை.....
கருத்தாய் தினம் தோறும்
நான் பாடல் பாடுகிறேன்
கவிஞன் இவன் என்று
எனை ஏற்றிட மாட்டாரோ?
வீட்டிற்கொரு வாசல்
வீதிக்கு பலவாசல்
போற்றிட வாழ்ந்தோரும்
போவது கல்லறையே....
காற்றினில் பாடுகிறேன்
உங்கள் காதினில் ஒலிக்கிறதா
இவன் காலி வயிற்றினை
உங்கள் காசுகள் நிரப்பிடுமா?
இருக்கின்ற எவனிடமும்
கொடுக்கின்ற மனம் இல்லை
மனம் படைத்த என்னிடமோ
பணம் கூட்டு வைப்பதில்லை....
ஏட்டினில் ஏற்றி வைத்து
மேடையில் பாடி நின்றால்
கேட்டிட கூட்டம் வரும்
பணத்தோடு புகழும் வரும்.....
ரோட்டினில் பாடுவதால்
கூட்டங்கள் கூடுமிங்கே
கை தட்டியும் பார்ப்பதுண்டு
காசு கேட்டிட கலைந்திடுதே....
சாலைப் பாடகன் இவன்
சரித்திரம் மாறிடுமா
இவன் வாழ்க்கையில் இருக்கும்
தரித்திரம் நீங்கிடுமா?

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.