Latest News

சீனாவுடன் சிறந்த உறவை பேண இலங்கை அரசாங்கம் உறுதி

சீனாவுடனான உறவை முன்னெடுத்து செல்ல புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தம்மை சந்தித்த சீன தூதுவர் வூ ஜியாங்ஹோவிடம் மைத்திரிபால இதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது சீனா ஜனாதிபதி தமது வெற்றியின் பின் அனுப்பி வைத்த வாழ்த்து செய்திக்கு மைத்திரிபால நன்றி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இலங்கை தீவிரமான உறவை கொண்டிருந்தது.
எனினும் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருங்கிய உறவு குறித்து ஆராய்ந்து வரும் நிலையிலேயே சீனாவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.