Latest News

2 பில்லியன் ரூபா செலவில் விளம்பரம் செய்து தோல்வி அடைந்த மஹிந்த!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இன்று தமது வர்த்தக வாணிப பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால மூன்றில் ஒன்றை விட குறைந்த செலவிலேயே விளம்பரங்களை மேற்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன 676 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் பத்திரிகை விளம்பரங்களுக்காக 1 பில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளார்.
இந்தநிலையில் மொத்த விளம்பர செலவான 2.03 பில்லியன் ரூபாய்களும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இதேவேளை காட்டப்பட்டுள்ள இந்த செலவுத்தொகையில் விளம்பர தயாரிப்பு செலவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.