கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல்வாதிகளின் கைகளில் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அப்போதைய ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
களுத்துறை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் தனுஸ்க கொடிகார வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதமொன்றை வைத்திருந்தார்.
இந்த ஆயுதத்திற்கு அனுமதிப்பத்திரம் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
குறித்த கைத்துப்பாக்கியின் இலக்கங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.
பேருவளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சமில ரணசிங்கவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை படுகாயமடையச் செய்துள்ளதாக, தனுஸ்க கொடிகார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனுஸ்கொ கொடிகார விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் இவ்வாறு ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment