கடந்த ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு விடயங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவரின் தொடர் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதிபர், ஆசிரியர் அல்லது சாதாரண அரச பணியாளர் ஒருவருரின் செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகள் மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது.
ஜனாதிபதி விசாரணைப் பிரிவின் மீது பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் காரணமாக விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment