Latest News

பிணத்துடன் உறவு கொள்வதற்காக இளம்பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்த பெண்ணின் சடலத்துடன் உறவு வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக
இளம்பெண் ஒருவரை கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் Aargau மண்டலத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு, ரயில் நிலையத்தில் ஒருநாள் இரவு வேலையில் 31 வயதுள்ள அந்த வாலிபன் உலாவியுள்ளான்.
அப்போது, 18 வயதுள்ள ஒரு இளம்பெண் ரயிலில் இருந்து இறங்குவதை பார்த்து அவரை பின் தொடர்ந்துள்ளான்.
அந்த பெண் ஆள் நடமாட்டமில்லாத இடத்தை அடைந்ததும், அந்த வாலிபன் தனது துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை தலையில் சுட்டுள்ளான்.
ஆனால் அதிஷ்டவசமாக அந்த துப்பாக்கியில் இருந்த குண்டு பழுதடைந்திருந்ததால் மூளையை தாக்கவில்லை.
தப்பி ஓடிய பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்ததோடு, பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்பு விசாரணையில், அந்த வாலிபரின் வீட்டை கண்டுபிடித்து சோதித்த பொலிசார், அவனது கணனியில் எண்ணற்ற சிறுமிகளின் நிர்வாண படங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
நீதிமன்றத்தில் அந்த வாலிபன் பேசுகையில், என்னை எந்த பெண்ணும் திரும்பி பார்ப்பது இல்லை, விரும்புவதும் இல்லை. இதனால் விரக்தியடைந்து எப்படியாவது பெண்களை கற்பழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சுட்டேன் என வாக்குமூலம் அளித்தான்.
இரண்டு வருடமாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த வாலிபர் மீது கொலை குற்றம் மற்றும் இறந்தவர்களின் அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், அந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு 20,000 பிராங்குகள் நிதி வழங்கவேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.