இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கோழி கறி உணவை உண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷகிதா ஷகித் என்கிற அந்த இளம்பெண் பல மாதங்களாக உணவு ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மான்செஸ்ட்டர் நகரில் புகழ்பெற்ற ’அல்மோஸ்ட் பேமஸ்’ என்ற ஹொட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார்.
உணவை பரிமாறுவதற்கு முன் தனக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாகவும், அதை பாதிக்காத வகையில் உணவை தாருங்கள் என முன்கூட்டியே எச்சிரிக்கை செய்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட பணியாளர், தங்களிடம் விஷேசமாக சமைக்கப்பட்ட கோழி கறி இருப்பதாகவும் அதை உண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்து கோழி கறியை பரிமாறியுள்ளார்.
இதையடுத்து கோழி கறியை சாப்பிட்ட அந்த பெண் உடனே மயங்கி சுருண்டு விழுந்தார். பின்னர் மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த பெண்ணின் மரணம் பற்றி சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், அவர் உண்ட கோழி கறியில் உணவு ஒவ்வாமையை மேலும் தீவிரபடுத்தும் மசாலா பொருட்கள் இருந்ததால், அது நேரடியாக மூளையையும், இதயத்தையும் பாதித்து மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.



No comments:
Post a Comment