Latest News

ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்? தேடுதல் தொடர்கிறது

கடந்த ஜனவரி 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் அதிகாலை, அலரி மாளிகையில் யார்? யார் பிரசன்னமாகியிருந்தனர் என்பதை கண்டறியும் நோக்கில் அங்கிருந்து சிசிடிவி கமெராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த கமெராக்களின் படப்பிடிப்புக்களை ஆராயவுள்ளனர்.
அதேநேரம், அலரிமாளிகையில் குறித்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உள் மற்றும் வெளிவரும் அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
தேர்தலில் தோல்வி ஏற்படப் போவதை அறிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராணுவப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார்.
இதற்காக சட்டமா அதிபர் மற்றும் இராணுவ, பொலிஸ் தலைமைகளை அலரி மாளிகைக்கு அழைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அவர் அதற்கு உடன்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் முறைப்பாடாக தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.