பிலியந்தல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான
அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் லம்போர்கினி கார் ஒன்றை
மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், அவரது புதல்வர் இராணுவத்திற்கு வாகனங்களை விநியோகித்து வருபவர் எனக் கூறப்படுகிறது.
லம்போர்கினி கார் தனது மகனின் நண்பருடையது என வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மூலம் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கார் பற்றி ஆவணங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அவற்றை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் லம்போர்கினி ரக கார்களை பயன்படுத்தி வந்தனர். லம்போர்கினி கார்கள் 10 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment