Latest News

கலாச்சாரத்தை பேணும் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்

கடந்த காலத்தில் போருக்கு பின்னராக தமிழர் நிலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சீரழிக்கப்பட்ட சமுதாயத்தின் தொடர்ச்சியாக அதனுள் சிக்குண்டு ரவடிக் கும்பல்களாக வளர்ந்துள்ள நமது இளைஞர்,யுவதிகள் இனங்காணப்பட்டுளளனர்.
இவர்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர்கால சமுதாயத்தினை சிதைக்கும் அதே வேளை தற்பொழுது வாழும் மக்களுக்கு சிரமங்களையும் அச்சங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மகிந்த ராஜபக்சவின் மிகமோசமான ஆட்சியின் கீழ் இராணுவ பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் இயங்கி சமுதாயப் பிறழ்வு உள்ளவர்களாக சிந்தனையற்றவர்களாக மாறியிருக்கும் நபர்கள் மீது கலாச்சாரத்தை பேணும் குழு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
தற்பொழுது மலர்ந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மாற்றத்துக்கான அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கலாச்சாரம் பேணும் வகையில் கலாச்சாரம் பேணும் குழுவின் நடடிவடிக்கைகள் அமையும்.
சட்டம் ஒழுங்கு இந்த நாட்டில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சிதைந்து சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டு நீதி தலைகுனிந்து இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடிய சூழலில் அதன் எச்சங்களாக இன்னும் கிராமங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பும் ரடிவுக் கும்பல்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன.
மகிந்த ராஜபக்சவின் அடிவருடிகளாக இருந்தவர்களின் தூண்டுதல்களின் பேரிலேயே இந்த கும்பல்கள் இயங்கி வருகின்றன.
எனவே எமது பண்பாட்டையும் எமது எதிர்கால சந்ததியின் கல்வி கலாச்சாரத்தை பேணும் வகையில் சமுக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தயவுதாட்சண்யம் இன்றி குற்றம் நடைபெறுகின்ற இடத்திலேயே தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை எச்சரிக்கையுடன் அறியத்தருகின்றோம் என கலாச்சாரத்தை பேணும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.