Latest News

ஹெரோயின் வழக்குகளை தூசி தட்டுகிறார் புதிய அமைச்சர்

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவருக்கு சொந்தமான மதுபான போத்தல்கள் அடங்கிய கொள்கலன் மற்றும் இரண்டு லொறிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் தெமட்டகொடை பிரதேசத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. மதுபானம் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபான போத்தல்களுடன் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் செயற்கை இரசாயனம் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் தனது நண்பரிடம் இந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்திருந்தாகவும் அங்கு மதுபானங்களை களஞ்சியப்படுத்த அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றிய மதுபானங்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என தெரியவந்துள்ளது. களஞ்சியம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற அனுமதியுடன் அதனை சோதனையிட பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மதுபான வர்த்தகர் என்பதுடன் அவருக்கு சொந்தமான சாராய உற்பத்தி தொழிற்சாலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.