Latest News

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஜ.தே.க.வில் இணைவு?

இறுதி நேரத்தினில் மஹிந்த பக்கம் பாய்ந்த முன்னாள் ஜ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மன்னிக்கப்பட்டு மீள ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள திஸ்ஸ அத்தநாயக்க  இன்று திங்கட்கிழமை தான் மீண்டும் கொழும்பு திரும்பவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தவர்களுடன் சிங்கப்பூரிலுள்ள நட்சத்திர விடுதியில் தற்போது தங்கியுள்ள திஸ்ஸ அத்தநாயக்க ஏற்கனவே மீண்டும் ஜ.தே.கவுடன் இணையும் பேச்சுக்களினை நடத்தியதாக தெரியவருகின்றது.
அவ்வகையினில் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள ரணில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பதவிகள் ஏதும் இப்போதைக்கு வழங்கப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை தான் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, இணையங்கள் சில தான் நாட்டைவிட்டு தப்பித்து சென்றுள்ளதாக பிரச்சாரங்களை செய்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
மஹிந்த தரப்புடன் இணைந்த திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்ததுடன், அவர் அப்பதவியினை 21 நாள்கள் மட்டுமே அவர் வகித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.