ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த, மைத்திரி என்ற இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு அப்பால் பேசப்பட்ட ஆ.ஏ சிறிசேன என்ற வேட்பாளரை, கொழும்பின் ஊடகம் ஒன்று அண்மையில் செவ்வி கண்டபோது தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த,மைத்திரி என்ற இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு அப்பால் பேசப்பட்ட ஒருவரே ஆ.ஏ சிறிசேன என்ற வேட்பாளராவார்.
உருவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒத்த உருவத்தைக் கொண்ட இவர், மைத்திரிபாலவின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இவர், மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலின் போது பலர் சிறிசேன என்ற பெயரை கண்டு இவருக்கும் வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கொழும்பின் ஊடகம் ஒன்று அண்மையில் அவரை செவ்விக்கண்டபோது தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக குறிப்பிட்டார்
இதேவேளை தம்மை யாரும் தேர்தலில் போட்டியிடுமாறு கோரவில்லை.
தாம் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரத்துக்கு நடித்து புகழ் பெற்றமையால் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது பிரசாரத்துக்காக 5 லட்சம் ரூபாய்கள் செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தேர்தலில் 18ஆயிரத்து 174 வாக்குகளை பெற்றுள்ளமையால் தாமே நாட்டில் மூன்றாவது முக்கியமானவர் என்று நினைப்பதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment