அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பிரபல நடிகையின் முகத்தை தன் தோற்றத்தில் கொண்டு வருவதற்காக, 190 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்(Newyork) நகரை சேர்ந்த ஜஸ்டின் ஜெட்லிகா(Justin Jedlica Age-34) என்ற நபர் இதுவரை 190 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, நூறு சதவிகித பிளாஸ்டிக் மனிதராக மாறியுள்ளார்.
இவர் அமெரிக்க நடிகை ஜூலியா ரோபர்ட்ஸை(Juliya Roberts) போலவே நெற்றியையும் முகத்தோற்றத்தையும் பெற வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு செய்துள்ளார்.
மேலும் இதற்காக தன் நெற்றியில் இருந்த நரம்புகளை வேறு விதத்தில் சரிபடுத்தி மிகவும் அபாயகரமான அறுவை சிகிச்சைகளை பெற்றவர், உலகிலேயே அதிக முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பெற்ற மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இதுகுறித்து ஜஸ்டின் கூறுகையில், மிகவும் ஆபத்து நிறைந்த என்னுடைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முயற்சிக்காக இதுவரை 1 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன் என்றும் ஆனாலும் இன்னும் எனக்கு அதன் மீது இருக்கும் ஆர்வம் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.







No comments:
Post a Comment