அமெரிக்காவில் 9 மாத தம்பியை, 5 வயது சிறுவன் தலையில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.
.
அமெரிக்காவின் மிசெளரி(Missouri) மாகாணத்தில் உள்ள நோடவே கண்டிரியை(Nodaway Country) சேர்ந்த பெண் அலெக்சிஸ் வீடெர்ஹொல்ட்(Alexis Wiederholt).
இவர் தனது 5 வயது மகன் மற்றும் 9 மாத ஆண் குழந்தையான கார்பினுடன்(Corbin) தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கார்பினை படுக்கை அறையில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது படுக்கையறையில் இருந்த தாத்தாவின் துப்பாக்கியை எடுத்த 5 வயது சிறுவன், விளையாட்டாக சுட்டபோது எதிர்பாராதவிதமாக அவன் கை தவறி கார்பினின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அலெக்சிஸிடம், அம்மா என்னை மன்னித்து விடுங்கள், நான் கார்பினை சுட்டுவிட்டேன் என சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அலெக்சிஸ் அருகில் இருந்த மருத்துவமனையில் குழந்தையை உடனடியாக அனுமதித்துள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து அலெக்சிஸின் தந்தை கூறுகையில், பாதுகாப்புக்காகவும், துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்காவும் நான் துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பி அதை ஒரு டப்பாவில் போட்டு பூட்டி வைத்திருந்தேன். அந்த டப்பாவை சாவி அல்லது ஸ்க்ரூடிரைவரால் மட்டுமே திறக்க முடியும் என கூறியுள்ளார்.



No comments:
Post a Comment