Latest News

பாப்பரசருக்கு பின்னர் தலாய் லாமா!

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கையில் வெற்றிக்கரமான பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் பயணம்
தொடர்பில் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
பாப்பரசர் பிரான்ஸின் திருத்தந்தை, முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் தேர்தல் முடிவடைந்தவுடனேயே இலங்கை வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வருடத்தில் இலங்கைக்கு வரவிருந்த தலாய் லாமாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு காரணம் பொருளாதாரத்தில் இலங்கை அதிகமாக தங்கியிருக்கும் சீனாவின் அழுத்தமே என்று கூறப்பட்டது.
சீனா தமது கொள்கைகளை ஏற்க மறுத்ததன் காரணமாகவே தலாய்லாமா இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் இலங்கையின் ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றம் சீன எதிர்ப்புக்கொள்கையை முன்னிலைப்படுத்தி வருகிறது.
எனவே தலாய்லாமாவின் பயணத்துக்கும் புதிய நிர்வாகம் இடம்தரும் என்ற நம்பிக்கையை ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.