Latest News

பீட்சா டெலிவரி செய்தவருக்கு அடித்த “லக்”: இப்படியும் மனிதர்கள்

அமெரிக்காவில் பீட்சா டெலிவரி செய்த ஊழியருக்கு 2084 டொலர் பணத்தை டிப்சாக கொடுத்து ரியல் எஸ்டேட் முகவர்கள் அசத்தியுள்ளனர்.

ஆன் ஆர்பர் நகரில் கடந்த வியாழன் அன்று கெல்லர் வில்லியம்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் பிராந்திய முகவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பில் பங்கேற்றவர்களுக்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக வந்திருந்த ராப் என்ற டெலிவரி பாய்க்கு 2084 டொலர் (இந்திய மதிப்பில் 1,28,418 ரூபாய்) பணத்தை டிப்ஸ் கொடுத்து அந்நிறுவனத்தின் முகவர்கள் அசத்தினர்.
இதுகுறித்து அந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்டேசி கூறுகையில், சேவைத்துறையில் இருக்கும் யாருக்காவது பாராட்டை தெரிவிக்க விரும்பினோம். அந்த விருப்பத்திற்காகவே பீட்சா டெலிவரி செய்தவருக்கு டிப்ஸ் வழங்கினோம் என கூறியுள்ளார்.
ஒரே ஒரு பீட்சா டெலிவரி செய்ததற்காக பணம் மட்டுமின்றி விசா கிப்ட் கார்டு, லாட்டரி டிக்கெட்கள், பாரட்டுக் கடிதம் என்று கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெகுமதி கிடைத்ததால், பணியாளர் ராப் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருப்பதாக அவர் பணிபுரியும் பீட்சா ஹவுஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.